பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படம் எப்போது ரிலீஸ்- அதிகாரப்பூர்வ தகவல்
கல்கி கிருஷ்ண மூர்த்தி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் என்கிற நாவல் மக்களிடம் மிகவும் பிரபலம்.
அந்த நாவலை தழுவி மணிரத்னம் அவர்கள் பொன்னியின் செல்வன் என்கிற பெயரிலேயே படம் இயக்கி வருகிறார்.
இதில் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, ஜெயராம், விக்ரம் பிரபு என பலர் நடிக்கிறார்கள். அண்மையில் சுல்தான் படத்தின் புரொமோஷனுக்காக நடிகர் கார்த்தி லைவ் சாட் வந்துள்ளார்.
அப்போது அவர், பொன்னியின் செல்வன் படம் அழகாக தயாராகி வருகிறது. இதுவரை 70% படப்பிடிப்பு முடிந்துள்ளது.
கொரோனா பிரச்சனையால் படத்தின் சில வேலைகள் தாமதம் ஆகிறது.
படத்தை 2022 பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸிற்கு எதிர்ப்பார்க்கலாம் என கூறியுள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் தான் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் வேலையை கவனிக்க, மொத்த படத்திற்கும் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் தான் இசை.

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
