ரஜினிக்கு பெரிய பதவி கொடுக்க முன்வந்த மத்திய அரசு.. ஆனால் நிராகரித்த சூப்பர்ஸ்டார்
நடிகர் ரஜினிகாந்த் தற்போதும் பிசியாக படங்களில் நடித்து வருகிறார். 74 வயதாகும் அவர் நடிக்கும் படங்கள் தற்போதும் மிகப்பெரிய வசூலை குவிக்கின்றன. அடுத்து அவரது நடிப்பில் கூலி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
நீண்ட காலமாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் வருவேன் என கூறிவந்த நிலையில் இறுதியில் தான் அரசியலுக்குள் வரவில்லை என அறிவித்தது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
மறுபுறம் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கி சில தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன் பிறகு திமுகவுடன் கூட்டணி சேர்ந்து தற்போது அந்த கட்சியின் உதவியுடன் எம்பி ஆகி இருக்கிறார். எம்பி பதவி கிடைத்த பிறகு கமல் சமீபத்தில் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்தும் பெற்று இருந்தார்.
கவர்னர் பதவி
இந்நிலையில் ரஜினிகாந்த்தின் அண்ணன் சத்ய நாராயணா ராவ் அளித்த பேட்டியில் "கமல் போல ரஜினியும் எம்பி ஆவாரா" என பத்ரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
அதற்கு பதில் அளித்த அவர் "கவர்னர் பதவியே தேடி வந்தது, வேண்டாம் என கூறிவிட்டார்" என தெரிவித்து இருக்கிறார்.