விசில் படத்தில் நாயகனாக நடித்த ஹீரோவை நியாபகம் இருக்கா... லேட்டஸ்ட் போட்டோ
80, 90களில் கலக்கிய ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பல பிரபலங்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் இருக்கிறது.
சிலர் இப்போது நடித்து வந்தாலும் நிறைய பேர் காணாமல் போய்விட்டனர். தற்போது 90களில் சூப்பர் படம் நடித்த ஒரு நடிகரின் லேட்டஸ்ட் போட்டோ தான் வைரலாகி வருகிறது.
விசில் படம்
கடந்த 2003ம் ஆண்டு தமிழில் ஹாரர் படமான விசில் வெளியாகி இருந்தது. இதில் விக்ரமாதித்யா சுக்லா, ஷெரின், காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஹாரர்-த்ரில்லர் ஜானராக வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமான விக்ரமாதித்யா 2000ம் ஆண்டு தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு என நிறைய படங்கள் நடித்து வந்தார்.
வெற்றிப் படங்கள் நடித்தாலும் திடீரென நடிப்பை நிறுத்திவிட்டார். தற்போது நடிகரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வர விசில் பட நடிகராக இவர் என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.

செங்கடல் மற்றும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ஹவுதிகள்... குவித்து வைத்திருக்கும் ஆயுதங்கள் News Lankasri
