நயன்தாரா - விக்கியின் இரண்டாவது ஹனிமூன்.. ஏற்பாடுகளை செய்த பிரபலம் யார் தெரியுமா
நயன்தாராவின் இரண்டாம் ஹனிமூன் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளை செய்தது யார் என்கிற விவரம் வெளிவந்திருக்கிறது.
நயன் - விக்கி
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமண விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் அதன் வீடியோ விரைவில் நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.
திருமணத்திற்கு பின் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்று திரும்பிய நயன் - விக்கி ஜோடி அதன் பின் சினிமா பணிகளில் பிசியாக இருந்தனர்.
2ம் ஹனிமூன் ஏற்பாடு செய்தது இவரா
அதன் பிறகு தற்போது இரண்டாவது ஹனிமூனுக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று இருக்கின்றனர். அங்கு எடுக்கும் போட்டோக்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இன்று வெளியிட்டு இருக்கும் வீடியோவில் நயன்தாரா கூலாக படுத்துக்கொண்டு வெகேஷனை என்ஜாய் செய்து கொண்டிருக்கிறார்.
இந்த ஏற்பாடுகளை செய்தது விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் டிடி தான் என தனது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார் விக்னேஷ் சிவன்.
அதிதி ஷங்கர் விருமன் வெற்றி விழாவுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க!