பிக் பாஸில் இன்று நடைபெறப்போவது இது தான்! அப்போ டைட்டில் வின்னர் ஆகப்போவது யார்?
பிக் பாஸ் சீசன் 4ல் இறுதி போட்டியாளராக விளங்கி கேபிரியலா கடைசி நேரத்தில் 5 லட்சம் பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இதனால் ரம்யா,சோமசேகர், ரியோ, பாலா மற்றும் ஆரி என 5 நபர்கள் பைனல் போட்டிக்கு சென்றுள்ளனர்.
நாளை நடைபெறவிருக்கும் இந்த பைனல் போட்டியின் முன்னோட்டமாக இன்று பல திருப்பங்களுடன் எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறது.
இதில் 5 போட்டியாளர்கள் இன்று யாரவது ஒருவர் வெளியேற்ற படுவார் என்று பலரும் எண்ணிய நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் வீட்டை விட்டு ஒருவர் கூட வெளியேறவில்லையாம்.
மேலும் போட்டியாளர்களுடன் கலந்துரையாடிய கமல் ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு உங்களுடைய திட்டங்கள் என்னென்ன என்று கேட்டு தெரிந்து கொள்கிறார்.
இதன்பின் 5 லட்சம் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய கேபி மீண்டும் கமல் ஹாசனுடன் மேடையில் நின்று கலந்துரையாட வருகை தருகிறார்.
இதனை தொடர்ந்து போட்டியாளர்களிடம் யாருடனும் யாருக்காவது பிரச்சனை இருக்கிறதா என்று கேட்கிறார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவை மட்டுமே இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் நடைபெறுகிறது என்றும், இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு யாரும் வெளியரவில்லை என்று தகவல்கள் கூறுகிறது.
யாரவது ஒருவர் வீட்டை விட்டு வெளியேறினால் மீதம் உள்ளவர்களை வைத்து வெற்றியாளர் யாரென்று கணிக்கலாம் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் தான்.