சினிமா துறையில் ஹீரோக்களுக்கு இடையே போட்டி இருப்பது போல நடிகைகளுக்கு மத்தியிலும் போட்டி இருக்கத்தான் செய்கிறது.
2023ல் அதிகம் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றால் த்ரிஷா மற்றும் தமன்னா ஆகியோர் தான். ஜெயிலர் படத்தின் காவாலா பாடலில் டான்ஸ் ஆடி பெரிய ட்ரெண்ட் ஆகிவிட்டார். அவரை போல டான்ஸ் ஆடி ஏராளமானோர் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டனர்.
யார் நம்பர் 1?
இந்நிலையில் 2023ல் கூகுள் தளத்தில் அதிகம் தேடப்பட்ட தமிழ் நடிகைகள் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது.
வருடத்தின் தொடக்கத்தில் த்ரிஷா முன்னணியில் இருந்தாலும், காவாலா பாடல் வந்த பிறகு தமன்னா தான் உச்சத்திற்கு சென்றிருக்கிறார். அதன் பிறகு த்ரிஷா மீண்டும் முன்னணிக்கு வர தொடங்கி இருக்கிறார்.
அந்த புள்ளி விவரங்களை ரசிகர்கள் ஷேர் செய்திருக்கும் நிலையில் திரிஷா அதை இன்ஸ்டாவில் ஷேர் செய்து நன்றி கூறி இருக்கிறார்.
த்ரிஷா விஜய் ஜோடியாக லியோ படத்தில் நடித்த நிலையில் அடுத்து அஜித் ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மேலும் மன்சூர் அலி கான் பேச்சுக்கு த்ரிஷா பதிலடி கொடுத்திருந்த விஷயமும் பெரிய சர்ச்சை ஆனது குறிப்பிடத்தக்கது.