விஜய், அஜித் இடத்தை அடுத்து நிரப்பப்போகும் நடிகர்கள் யார்?.. பிரதீப் ரங்கநாதன் ஓபன் டாக்
பிரதீப் ரங்கநாதன்
தமிழ் சினிமாவில் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.
இவரது நடிப்பில் சமீபத்தில் டிராகன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் நடித்திருக்கிறார், இப்படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாகிறது.

நீயெல்லாம் நாயகியா நடிக்க மாட்ட, நீயெல்லாம் Artistஆ.. அய்யனார் துணை நடிகை மதுமிதாவை விமர்சித்த இயக்குனர், யார் அது?
இந்த படத்திற்கு முன் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டியூட் படத்திலும் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் டியூட் படத்தில் நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார், சான் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
முழு காமெடி கலந்த படமாக உருவாகியிருக்கும் இப்படம் வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாக உள்ளது.
அஜித்-விஜய்
இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பிரதீப் ரங்கநாதனிடம் தமிழ் சினிமாவின் அடுத்த அஜித்-விஜய் யார் என கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பிரதீப், அஜித் விஜய் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.
இந்த இடத்திற்கு வர அவர்கள் 30 வருடங்கள் உழைத்துள்ளார்கள். ரஜினி சார், விஜய் சார், அஜித் சார் ரசிகர்கள் கதை பிடித்தால் ரசிக்க போகிறார்கள்.
30 வருடங்களுக்கு பிறகு வேண்டுமானால் அவர்கள் இடத்தை யார் பிடிக்கிறார்கள் என்பது தெரியும், அதுகூட ரசிகர்களின் கையில் உள்ளது என பேசியுள்ளார்.