யார் அந்த போட்டியாளர்? ஓவர் பில்டப்புடன் வந்திருக்கும் பிக் பாஸ் அல்டிமேட் ப்ரொமோ
பிக் பாஸ் அல்டிமேட் ஷோ இந்த வார இறுதியில் ஒளிபரப்பை தொடங்க இருக்கிறது. ஏற்கனவே போட்டியாளர்கள் அனைவரும் ப்ரோமோ ஷூட் முடிந்து ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு விட்டனர்.
பிக் பாஸ் முதல் சீசன் சினேகன், ஜூலி ஆகியோர் ப்ரோமோ தற்போது ஏற்கனவே வெளிவந்து இருக்கும் சூழலில் தற்போது விஜய் டிவி ட்விட்டரில் மேலும் ஒரு புது ப்ரோமோவை வெளியிட்டு இருக்கிறது. அதில் ஒரு குடுகுடுப்பை காரர் வீட்டு வாசலில் வந்து ஓவர் பில்டப்புடன் பேசுகிறார்.
கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என அவர் ஒருவரை பற்றி குறிப்பிடுகிறார். ஆனால் அந்த போட்டியாளர் என்பது இறுதிவரை காட்டப்படவே இல்லை. அவர் சொன்ன குறிப்புகளை வைத்து பார்த்தால் இந்த ப்ரோமோ வனிதா விஜய்குமாருக்காக தான் இருக்கும் என தெரிகிறது.
ப்ரொமோ இதோ..
#YaaruAnthaHouseMate..? #BBUltimate https://t.co/TGEwQ8LFQT
— Vijay Television (@vijaytelevision) January 26, 2022