அதிக சம்பளம் வாங்கும் இந்திய சினிமா நடிகை யார்?.. எத்தனை கோடி?
சினிமா துறையில் பட கதைகளை தாண்டி மக்கள் ஆச்சரியப்படுவது வேறொரு விஷயங்களுக்காக தான்.
அதாவது படத்தின் பட்ஜெட், வியாபாரம், நடிகர்-நடிகைகளின் சம்பளம் எல்லாம் இப்போது கோடியாய் உயர்ந்துகொண்டே வருகிறது. ஒவ்வொரு முறை பெரிய நடிகர்களின் படம் வரும்போது இந்த விஷயங்களை கேட்டு மக்கள் ஆச்சரியப்பட்டு தான் வருகிறார்கள்.
நாயகர்களுக்கு இணையாக நடிகைகளின் சம்பளம் இன்னும் அதிகமாகவில்லை என்றாலும் அவர்களுக்கான மார்க்கெட் அதிகமாக கோடிகள் உயர்ந்துகொண்டே தான் வருகிறது.
டாப் யார்
சரி நாம் இந்த பதிவில் இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நாயகி யார் என்ற விவரத்தை காண்போம். இந்திய சினிமாவைப் பொறுத்தவரையில் தீபிகா படுகோனே ரூ. 25 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெற்ற முதலிடத்தில் இருக்கிறார்.
அவருக்கு அடுத்து கங்கனா, பிரியங்கா சோப்ரா, கத்ரினா கைப், ஆலியா பட் ஆகியோர் ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்.
தென்னிந்திய சினிமாவைப் பொறுத்த வரையில் த்ரிஷா, நயன்தாரா ஆகியோர் ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்களாம்.
இவர்களுக்கு அடுத்து சமந்தா, ராஷ்மிகா, சாய் பல்லவி, பூஜா ஹெக்டே, மிருணாள் தாகூர், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் உள்ளார்களாம்.