பீஸ்ட் படத்தை முதலில் பார்த்தது இவர்தான்.. விஜய்க்கு கூட காட்டாத நெல்சன்
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களுக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்கும் படம் பீஸ்ட். விஜய் உளவு அமைப்பின் ஏஜெண்டாக நடித்து இருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து பிரம்மாண்ட ரெஸ்பான்ஸ் பெற்று இருக்கிறது.
ரிசர்வேஷன் தொடக்கம்
படம் ஏப்ரல் 13ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் இன்று படத்தின் ரிசர்வேஷன் தொடங்கி இருக்கிறது. முன்பதிவு தொடங்கி இருக்கும் பல தியேட்டர்களில் தற்போது டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து இருக்கிறது.
மேலும் சென்னையில் பல முக்கிய தியேட்டர்களின் முன்பதிவு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

படத்தை முதலில் பார்த்தது யார்?
இந்நிலையில் பீஸ்ட் படத்தை முழுதாக முடித்தபிறகு நெல்சன் அதை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் அவரது ஸ்டூடியோவில் பணியாற்றுபவர்களுக்கு தான் போட்டு காட்டினாராம். அவர்கள் சொல்லும் விமர்சனம் தான் தனக்கு கிடைத்த முதல் review என நெல்சன் தெரிவித்து இருக்கிறார்.

பீஸ்ட் படத்தில் சமந்தாவா? இன்ஸ்டா ஸ்டேட்டஸால் பரவும் தகவல்