தளபதி 66 படத்தை இயக்கும் வாய்ப்பு இந்த இயக்குனர்களுக்கு தான் உள்ளதா? வெளியான சூப்பர் தகவல்..!
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் தளபதி 66 படம் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது, அந்த வகையில் இயக்குனர் அட்லீ தான் அந்த படத்தை இயக்கப்போவதாக கூறப்பட்டு வந்தது.
மேலும் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தளபதி விஜய் அடுத்ததாக நெல்சன், லோகேஷ் போன்ற புதுமுக இயக்குனர்களுக்கு தான் வாய்ப்பளிக்க இருப்பதாகவும், ஏ.ஆர்.முருகதாஸ், அட்லீ போன்ற முன்னணி இயக்குனர்களுடன் இணைய மாட்டார் எனவும் கூறப்படுகிறது.