பண பெட்டியுடன் வெளியே போக போவது இவர்தான்: பிக் பாஸ் அக்ஷரா சொன்ன விஷயம்
பிக் பாஸ் 5ல் இது இறுதி வாரத்திற்கு முந்தைய வாரம் என்பதால் போட்டியாளர்கள் பண பெட்டியுடன் வெளியே செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இன்று வெளியான ப்ரொமோ வீடியோவில் ஏழு லட்சம் ருபாய் வரை வழங்கப்பட்டு இருப்பது காட்டப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது வந்திருக்கும் தகவல் படி ஒரு போட்டியாளர் 12 லட்சம் ருபாய் பண பெட்டி உடன் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அந்த போட்டியாளர் யார் என்ற விவரம் வெளியாகவில்லை.
இந்நிலையில் பிக் பாஸில் இருந்து இரண்டு வாரங்களுக்கு முன் வெளியேறிய அக்ஷரா அளித்திருக்கும் பேட்டியில் 'அமீர் அல்லது நிரூப் ஆகியோரில் ஒருவர் தான் பணப்பெட்டி உடன் வெளியில் வர வாய்ப்பிருக்கிறது. தாமரை கண்டிப்பாக வரமாட்டார். ராஜு, பிரியங்காவும் அப்படி செய்ய வாய்ப்பில்லை" என அக்ஷரா கூறி இருக்கிறார்.