பிக்பாஸ் 5வது சீசனில் ரூ. 5 லட்சத்துடன் வெளியேறப்போவது இவரா?- வெளிவந்த தகவல்
பிக்பாஸ் 5வது சீசன் 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் இப்போது போட்டியாளர்கள் அனைவரும் படு சந்தோஷமாக இருக்கிறார்கள்.
காரணம் அனைவரின் வீட்டில் இருந்து உறவினர்கள் வர எல்லோருக்கும் சந்தோஷம். நாமும் சிலரது உணர்வுபூர்வ காட்சிகளை பார்த்து ரசித்தோம். இந்த எபிசோடுக்கு பிறகு பிக்பாஸ் வழக்கமாக செய்யும் விஷயம் ஒன்று இருக்கிறது.
அதுஒன்றும் இல்லை நிகழ்ச்சியின் இடையில் ரூ. 5 லட்சம் கொடுத்து யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் என கூறுவார். அப்படி இதற்கு முந்தைய நிகழ்ச்சியில் அதாவது 4வது சீசனில் கேப்ரியலா வெளியேறினார்.
அதற்கு முந்தைய நிகழ்ச்சியான 3வது சீசனில் கவின் ரூ. 5 லட்சத்துடன் வெளியேறினார்.
இந்த 5வது சீசனில் நடன இயக்குனர் அமீர் ரூ. 5 லட்சத்துடன் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.