யாஷ் ஜோடியாக சாய் பல்லவியா, ஸ்ருதி ஹாசனா? டாக்சிக் படம் பற்றி படக்குழு கொடுத்த அப்டேட்
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய ஹிட் ஆகி இந்தியா முழுவதும் வசூலை குவித்தது. அந்த படத்திற்கு பிறகு யாஷ் இந்தியா முழுவதும் பேசப்படும் நடிகராக மாறிவிட்டார்.
இருப்பினும் அவர் தனது அடுத்த படத்தை அறிவிக்க நீண்ட காலம் எடுத்துக்கொண்டார். பிரபல மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் உடன் டாக்சிக் என்ற படத்திற்காக கூட்டணி சேர்த்திருக்கிறார் அவர். இந்த படத்தின் அறிவிப்பு கடந்த வருடம் டிசம்பரில் வெளிவந்தது.
ஹீரோயின் யார்?
Toxic: A Fairy Tale for Grown-ups படத்தில் யாஷுக்கு ஜோடி யார் என்பது பற்றி பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. ஹிந்தி நடிகை கரீனா கபூர், சாய் பல்லவி, ஸ்ருதி ஹாசன் ஆகியோரின் பெயர்கள் செய்திகளில் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் டாக்சிக் படக்குழு இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறது. "இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு நல்ல ஒன்று தான், ஆனால் மக்கள் யாரும் படத்தில் நடிப்பவர்கள் யார் யார் என்பது பற்றி ஊகிக்க வேண்டாம்."
"தற்போது casting இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. எல்லோரும் அதிகார்பூர்வ அறிவிப்புக்காக காத்திருங்கள்" என கூறி இருக்கின்றனர்.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
