நேருக்கு நேர் படத்தில் இருந்து அஜித் விலக உண்மையான காரணம்! இது தெரியுமா
நடிகர் அஜித் மற்றும் விஜய் ஆகியோருக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. கோலிவுட் டாப் ஹீரோக்களாக வலம் வரும் அவர்கள் தற்போது ஒரு படத்தில் இணைந்து நடித்தால் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும் என சொல்லவா வேண்டும்.
அதற்கான முயற்சியை செய்வதாக வெங்கட் பிரபு உள்ளிட்ட இருக்குனர்கள் கூறினாலும், அது நடக்க இனி வாய்ப்பு இல்லை. விஜய் முழுநேர அரசியலில் இனி ஈடுபட இருப்பதால் சினிமாவுக்கு விரைவில் டாட்டா காட்ட இருக்கிறார்.
அஜித் விலகியது ஏன்
நடிகர் அஜித் மற்றும் விஜய் இதற்கு முன் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்து இருக்கின்றனர். அதற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை.
நேருக்கு நேர் படத்தில் முதலில் அஜித் மற்றும் விஜய் தான் நடிக்க தொடங்கினார்கள். ஆனால் அஜித் பாதியிலேயே வெளியேறிவிட்டார். அதன் பிறகு தான் சூர்யா அதில் நடித்தார்.
அஜித் பாதியில் வெளியேறியது ஏன் என்ற காரணம் பற்றிய தகவல் தற்போது பரவி வருகிறது. அஜித் அந்த படத்தில் தனக்கு விஜய் நடிக்கும் ரோல் தான் வேண்டும் என கேட்டாராம், ஆனால் அதற்க்கு இயக்குனர் வசந்த் அதற்கு ஒப்புக்கொள்ளாததால் தான் அஜித் வெளியேறிவிட்டார் என கூறப்படுகிறது.

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
