தனது 62வது படத்தை இயக்க விக்னேஷ் சிவனுக்கு அஜித் வாய்ப்பு கொடுக்காதது ஏன்?- இதுதான் காரணமா?
நடிகர் அஜித்
சிம்பு நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.
முதல் படத்திற்கு பிறகு நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களின் மூம் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை அமைத்துக் கொண்டார்.
சினிமாவில் உயர்ந்துகொண்டு வரும்போது தான் நடிகை நயன்தாராவை திருமணம் செய்துகொண்டார்.
மேலும் இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்தார்கள். எந்த ஒரு ஸ்பெஷல் தினம் வந்தாலும் தனது குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்ட வண்ணம் இருக்கிறது.
மிஸ் ஆன படம்
அஜித்தின் தீவிர ரசிகரான விக்னேஷ் சிவனுக்கு அவரின் 62வது படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது, படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.
படம் கைகூடியதும் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது குழுவினர் வெடி வைத்து கொண்டாடினார்கள், ஆனால் கடைசியில் படம் கைகூடவில்லை.
தற்போது அதற்கான காரணம் என்ன என்று ஒரு தகவல் வலம் வருகிறது. அதாவது அஜித் கதை கேட்க 2 முறை வர கூறியும் சரியான நேரத்தில் வராமல் காலம் தாமதித்துள்ளார்.
அதேபோல் 62வது படத்தின் வேலையின் போது விஜய் லியோ என்ற தரமான ஆக்ஷன் படம் நடித்து வந்துள்ளார். அந்த நேரத்தில் விக்னேஷ் சிவன் கூறிய மெல்லிய பின்னணியை கொண்ட காதல் கதை செட் ஆகுமா என்று கணித்துள்ளார்.
பட்ஜெட்டும் எகிற தயாரிப்பு நிறுவனமும் பின்வாங்கியுள்ளது. இப்படி சில காரணங்களால் தான் விக்னேஷ் சிவன் அஜித்தை இயக்கும் வாய்ப்பை மிஸ் செய்துள்ளார் என்கின்றனர்.

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
