நேருக்கு நேர் படத்தில் இருந்து அஜித் விலகியதற்கு இதுதான் காரணமா?- பிரபலம் சொன்ன விஷயம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் நடிக்க மாட்டார்களா என ஏங்கும் ரசிகர்களே இல்லை.
இப்போது அப்படி ஒரு விஷயம் நடக்குமா என்றால் சந்தேகம் தான். காரணம் இருவரின் சம்பளமும் எங்கேயோ உயரத்தில் உள்ளது, இவர்களை தாண்டி இயக்குனர், மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் என யோசித்து பார்த்தால் தமிழ் சினிமாவின் சில தயாரிப்பாளர்கள் ஒன்றாக இணைந்து படத்தை தயாரித்தால் தான் உண்டு.

நேருக்கு நேர்
ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு 1997ல் கிடைத்தது. வசந்த் இயக்கத்தில் அஜித்-விஜய் நடிக்க நேருக்கு நேர் என்ற படம் உருவாக இருந்தது. இருவரும் ஒன்றாக நடித்தும் வந்தார்கள், ஆனால் இடையில் அஜித் படத்தில் இருந்து வெளியேற அவருக்கு பதில் சூர்யா நடித்தார்.
அஜித் குறித்து தாமு
இப்படம் குறித்து அண்மையில் நடிகர் தாமு பேசும்போது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் அஜித் கலந்து கொண்டார். அதன்பிறகு டேட்டா? ரேட்டா? எது பிரச்சனை என தெரியவில்லை, உண்மை எதுவும் தெரியாமல் அதைப் பற்றி பேசக்கூடாது என கூறியுள்ளார்.
கையில் Tripsவுடன் புகைப்படம் வெளியிட்ட ஷிவாங்கி- மருத்துவமனை புகைப்படம், ரசிகர்கள் ஷாக்