நடிகை அனுஷ்கா ஷர்மா - விராட் கோலி லண்டனில் செட்டில் ஆனது ஏன்? காரணத்தை போட்டுடைத்த பிரபலம்
நடிகை அனுஷ்கா ஷர்மா கிரிக்கெட் வீரர் விராட் கோலியை 2017ல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2011ல் வாமிகா என்ற மகள் பிறந்தார்.
அதன் பிறகு இந்த வருடம் பிப்ரவரி 15ம் தேதி இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. மகனுக்கு அகாய் என பெயர் சூட்டி இருந்தனர்.
லண்டனில் செட்டில் ஆனது ஏன்?
இந்நிலையில் அனுஷ்கா மற்றும் விராட் இருவரும் தற்போது லண்டனில் செட்டில் ஆகி இருப்பது ஏன் என பிரபல நடிகை மாதுரி தீக்ஷித்தின் கணவர் டாக்டர் ஸ்ரீராம் நேனே விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
"அனுஷ்காவிடம் நான் பேசும்போது அவர் லண்டனில் செட்டில் ஆவதாக கூறினார். ஏனென்றால் தங்களது successஐ இங்கே அனுபவிக்க முடியவில்லை என கூறினார்."
"அவர் சொல்வது சரிதான். அவர்கள் எது செய்தாலும் அது கவனத்தை ஈர்க்கிறது. மக்கள் கொடுக்கும் கவனம் சில நேரங்களில் எல்லைமீறி செல்கிறது. அதையும் அவர்கள் பொறுமையாக தான் சமாளிக்க வேண்டும்."
"அதனால் தான் அனுஷ்கா மற்றும் விராட் இருவரும் தங்கள் குழந்தைகளை சாதாரணமாக வளர்க்க வேண்டும் என லண்டனில் செட்டில் ஆகி இருக்கிறார்கள்" என ஸ்ரீராம் தெரிவித்து இருக்கிறார்.