இதனால் தான் வெளியேறினாரா ஆர்யன்! வெளியான பாக்கியலட்சுமி சீரியல் ரகசியம்
பாக்கியலட்சுமி தொடரில் செழியன் ரோலில் இருந்து நடிகர் ஆர்யன் திடீரென வெளியேறி இருந்தார். அவருக்கு பதிலாக புது ஆர்யன் நடிக்க இருக்கும் காட்சிகள் இந்த வாரம் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்நிலையில் தற்போது ஆர்யன் திடீரென வெளியேறியதற்கான காரணம் தற்போது வெளிவந்து இருக்கிறது. அவர் விஜய் டிவியின் புது ஷோ கனா காணும் காலங்கள் விரைவில் ஓடிடி ஹாட்ஸ்டாரில் வெளிவர இருக்கிறது.
அதில் ஆர்யன் முக்கிய ரோலில் நடித்து இருக்கிறாராம். அதனால் தான் அவர் பாக்கியலட்சுமியில் இருந்து வெளியேறினார் என சொல்லப்படுகிறது.
ரசிகர்கள் உடன் அடிக்கடி லைவ் வீடியோவில் ஆர்யன் பேசுவது பழக்கம். பாக்கியலட்சுமி பற்றி கேட்டதற்கு 'அதை ஏன் நியாபக படுத்துறீங்க' என சொல்லி பதில் சொல்லாமல் நகர்ந்து இருக்கிறார் அவர்.