பீஸ்ட் என பெயர் வைத்தது ஏன்? விஜய் ரோலில் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கா
பீஸ்ட் படம் வரும் 13ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது.
தெலுங்கு பிரெஸ் மீட்
சமீபத்தில் தெலுங்கு ஆடியன்ஸுக்காக ஒரு பிரெஸ் மீட் சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் விஜய் கலந்துகொள்ளவே இல்லை. ஹீரோயின் பூஜா ஹெக்டே, நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மட்டுமே கலந்துகொண்டனர்.
பீஸ்ட் பெயர் வைக்க காரணம்?
பீஸ்ட் பிரெஸ் மீட்டுக்கு பிறகு மீடியா சேனல்களுக்கு பூஜா ஹெக்டே பேட்டி கொடுத்திருக்கிறார். அப்போது அவரிடம் 'பீஸ்ட் என பெயர் வைக்க என்ன காரணம் என கேட்கப்பட்டது.
அதற்கு பதில் கூறிய பூஜா ஹெக்டே விஜய்யின் கதாபாத்திரம் பற்றி பேசினார். "அவர் அமைதியாகவே இருப்பார், திடீரென அவருக்கு உள்ளே இருக்கும் பீஸ்ட் வெளியில் வரும். 10 செகண்ட் முன்பு அவர் இப்படி இல்லையே என எல்லோருக்கும் தோன்றும். அப்படி ஒரு கதாபாத்திரம். அதனால் தான் பீஸ்ட் என பெயர் வைத்திருக்கிறார்கள்" என பூஜா ஹெக்டே கூறி இருக்கிறார்.