எதிர்நீச்சல் சீரியல் அவசரமாக முடிக்கப்பட்டது ஏன்.. சன் டிவி கொடுத்த ப்ரெஷர்! - போட்டுடைத்த நடிகை
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் சமீபத்தில் நிறைவு பெற்றது. அதிகம் ரசிகர்களை கவர்ந்து முன்னணியில் இருந்த அந்த தொடர் முடிக்கப்பட்டது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த சீரியலில் பட்டம்மாள் என்ற ரோலில் நடித்து இருந்த பாம்பே ஞானம் அளித்த பேட்டியில் சீரியல் முடிந்தது ஏன் என்கிற காரணத்தை போட்டு உடைத்து இருக்கிறார்.
காரணம்
ஆரம்பத்தில் இருந்தே குணசேகரன் ரோலில் நடித்த மாரிமுத்துவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அவர் இறந்தது எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அடுத்து நடிக்க வந்த வேல ராமமூர்த்திக்கு ஆரம்பத்தில் விமர்சனம் வந்தாலும் போக போக ஏற்றுக்கொண்டனர்.
மாரிமுத்து மரணத்திற்கு பிறகு இயக்குனர் கதையில் செய்த சில மாற்றங்களால் டிஆர்பி ரேட்டிங் குறைந்தது. அதனால் சேனல் தரப்பு ப்ரெஷர் கொடுத்தது.
வேறு நேரத்திற்கு தொடரை மாற்றும்படி கூறினார்கள். ஆனால் அது வேண்டாம் என சொல்லி சீரியலை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார் இயக்குனர் என பாம்பே ஞானம் கூறி இருக்கிறார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
