கே.ஆர்.விஜயா, பத்மினிக்கு திருமணம் ஆனதால் நேர்ந்த சோகம்.. பிரபலத்தின் பதிவு
எந்த ஒரு மொழி சினிமா நடிகைகள் என்றாலும் அவர்கள் தயக்கம் காட்டும் ஒரே ஒரு விஷயம் திருமணம்.
காரணம் திருமணம் ஆனால் மார்க்கெட் குறைந்துவிடும், பட வாய்ப்புகள் கிடைக்காது என பயப்படுவார்கள். திருமண ஆனாலே உடல் எடை போடும் என பயப்படுவார்கள். தற்போது அந்த காலத்தில் கலக்கிய கே.ஆர்.விஜயா, பத்மினி பற்றி ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
பிரபலம் பேட்டி
டாக்டர் காந்தராஜ் ஒரு பேட்டியில், நடிகைகள் பலரும் ஏன் திருமணம் செய்து கொள்வதில்லை என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், நடிகைகள் என்பவர்கள் கனவுக்கன்னி, அவர்களை திருமணம் செய்யப்போவதாக பலரும் கூறி வருவார்கள். திருமணம் ஆனாலே கணவன், குடும்பம் ஆனால் இளைஞர்கள் யாரும் கண்டுகொள்வதில்லை.
திருமணம் செய்யவே பயப்படுகிறார்கள், அப்படி ஆனாலும் கர்ப்பம் தரிப்பதை தவிப்பார்கள். அழகு, உடல் கட்டுக்கோப்பு போய்விடும் என்பதால் குழந்தை பெற்றுக் கொள்வதையும் தவிர்ப்பார்கள். உதாரணமாக கேஆர் விஜயாவை உதாரணமாக சொல்லலா, வேலாயுதம் என்ற தொழிலதிபரை திருமணம் செய்தார்.
அவர் அப்போதே சொந்தமாக விமானம் வைத்திருந்தார், படப்பிடிப்பிற்கு விமானத்தில் பயணம் செல்ல ஆரம்பித்தார். திருமணத்திற்கு பின் குழந்தை பிறந்தது, அதற்கு பிறகு உடல் பெருத்துவிட்டது, அவரது பொலிவு உடல்வாகு போய்விட்டது.
அதேபோல் நடிகை பத்மினியும் ஒரு குழந்தை பிறந்ததுமே உடல் பெருத்துவிட்டது. அதனால்தான் பலரும் திருமணம் செய்ய தயங்குகிறார்கள் என கூறியுள்ளார்.