ப்ரோமோஷனுக்கு வராதது இதனால் தான்.. டாக்சிக் பட விழாவில் பேசிய நயன்தாரா
நடிகை நயன்தாரா வழக்கமாக அவர் நடித்த படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார். அதை அவர் இத்தனை ஆண்டுகளாக கடைபிடித்து வந்த நிலையில் தற்போது யாஷ் உடன் அவர் நடித்த டாக்சிக் படத்திற்காக மாற்றிக்கொண்டிருக்கிறார்.
நேற்று நடந்த டாக்சிக் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு நயன்தாராவும் வந்திருந்தார்.

காரணம்
மேடையில் பேசிய நயன்தாரா தான் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வராதது ஏன் என்கிற காரணத்தையும் கூறி இருக்கிறார்.
"ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வர எனக்கு விருப்பம் இல்லை என சொல்ல முடியாது. அது எனக்கு அவ்வளவாக வராது, அதனால் அதில் இருந்து விலகி இருப்பேன்."
"யாஷ் போன் செய்து அழைத்தார். அதனால் மறுக்க முடியாமல் இந்த நிகழ்ச்சிக்கு வந்து கலந்துகொண்டேன்" என நயன்தாரா கூறி இருக்கிறார்.
#Nayanthara about not Attending Promotions:
— Laxmi Kanth (@iammoviebuff007) August 8, 2026
"It's not that I don't want to attend Promotional events.. It's just that I'm not good very good at it.. So I stay away from it.. But this was special because so many reasons.. But i think it's just Yash.. He just made a call and It…