குக் வித் கோமாளியில் இருந்து திடீரென மணிமேகலை விலகியது ஏன்?- முதன்முறையாக தெரிவித்த புகழ்
குக் வித் கோமாளி
ரசிகர்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் அதிக வரவேற்பு பெற்றது குக் வித் கோமாளி. எல்லோரும் டென்ஷனாக ஓடும் இந்த காலத்தில் கொஞ்சம் சமையல் நிறைய கலாட்டா என இருக்கும் நிகழ்ச்சியாக உள்ளது.
சமையலில் கோமாளிகள் செய்யும் கலாட்டாக்களை ரசிகர்கள் அப்படி ரசிப்பார்கள்.
ரசிகர்களுக்கு பிடித்த கோமாளிகளில் மணிமேகலையும் ஒருவர். ஆனால் இவர் திடீரென குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி நான் வர மாட்டேன் என கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
மணிமேகலை குறித்து புகழ்
அண்மையில் ஒரு பட நிகழ்ச்சிக்கு சென்றுள்ள புகழிடம் மணிமேகலை வெளியேறியது குறித்து கேட்டுள்ளனர். அதற்கு அவர், நீங்கள் எல்லோரும் அவர் கர்ப்பமாக இருப்பதால் வெளியேறினார் என கூறுகிறீர்கள், அது உண்மையாக இருந்தால் சந்தோஷம் தான்.
என்ன காரணம் என்பதை நிஜமாக தெரிந்துகொண்டு பதிவிடுங்கள், மற்றபடி மணிமேகலை தான் இதுகுறித்து கூற வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
பிக்பாஸ் புகழ் மகேஷ்வரியா இது, படு கிளாமரான போட்டோ ஷுட்- செம வைரல்