இதுவரை மங்காத்தா 2 படம் வராதது ஏன், நீண்டநாள் ரகசியத்தை சொன்ன நடிகர்- யார் கையில் உள்ளது?
மங்காத்தா படம்
நடிகர் அஜித் இப்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
படத்திற்கான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வந்தது, அங்கு அஜித் எடுத்த புகைப்படங்கள் நிறைய சமூக வலைதளங்களில் வெளியாகிய வண்ணம் இருந்தது.
படக்குழு அடுத்து ஏதாவது ஃபஸ்ட் லுக் வெளியிடுவார்களா என்று தான் ரசிகர்கள் ஆவலாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் அஜித் அடுத்து யாருடன் இணைய போகிறார் என்ற பேச்சும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.
மங்காத்தா 2
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் வில்லனாக செம மாஸ் காட்டி நடித்த படம் மங்காத்தா.
இதில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், பிரேம்ஜி, ராய் லட்சுமி, வைபவ் என பலர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான இப்படம் ரூ. 68 கோடி முதல் ரூ. 100 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியது.
இதனால் ரசிகர்கள் மங்காத்தா 2 படம் எப்போது வெளியாகும் என நிறைய கேள்வி கேட்டு வருகின்றனர், ஆனால் எந்த பதிலும் இதுவரை வரவில்லை.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் நடிகர் வைபவ் பேசும்போது, மங்காத்தா 2 படம் பற்றி அவ்வப்போது வெங்கட் பிரபுவிடம் கேட்பேன்.
ஆனால் அஜித் சார் தரப்பில் இருந்து வெங்கட் பிரபுவிற்கு எந்த ஒரு அழைப்பும் வரவில்லை, அதனால் அப்படியே இருக்கிறார் வெங்கட் பிரபு என வைபவ் கூறியுள்ளார்.

கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்! IBC Tamilnadu

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
