பூஜா ஹெக்டேவை பீஸ்ட் ஹீரோயினாக தேர்வு செய்தது ஏன்? இந்த ஒரு காரணம் தான்.. நெல்சன் சொன்ன பதில்
நெல்சன் திலீப்குமாருக்கு மூன்றாவது படத்திலேயே விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவரின் பீஸ்ட் படம் தற்போது பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
பீஸ்ட்
ஏப்ரல் 13ம் தேதி ரிலீஸ் ஆகும் பீஸ்ட் படத்தின் டிக்கெட்டுகள் தற்போது விற்று முன்பதிவில் விற்று தீர்ந்து வருகிறது. படத்தின் கதை என்ன என்பது ட்ரைலர் பார்க்கும்போதே தெரிந்தாலும் நெல்சன் திரைக்கதை எப்படி இருக்கும் என்று பார்க்க தான் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பூஜா ஹெக்டேவை தேர்வு செய்தது ஏன்?
இந்நிலையில் தற்போது இயக்குனர் நெல்சன் அளித்து இருக்கும் பேட்டியில் பூஜாவை ஹீரோயின் ஆக தேர்வு செய்ய என்ன காரணம் என கூறி இருக்கிறார்.
பீஸ்ட் படத்திற்கு ஹீரோயின் தேடும்போது Ala Vaikunthapurramuloo படம் ரிலீஸ் ஆகி இருந்தது. அதை பார்த்துவிட்டு தான் அவரை தேர்வு செய்தோம் என நெல்சன் கூறினார்.
மேலும் இதற்குமுன் விஜய்க்கு ஜோடியாக ஒரு நடிகை வேண்டும் என முன்பே முடிவெடுத்துவிட்டதாக அவர் தெரிவித்து உள்ளார்.