பார்த்திபனை பழிவாங்கினாரா பிரதீப் ரங்கநாதன்? இதற்கு தான் இப்படி ஒரு வசனம் வைத்தாரா
லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வந்த லவ் டுடே படம் பாக்ஸ் ஆபிஸில் முகப்பெரிய ஹிட் ஆனது. ஒரு காதல் ஜோடி செல்போனை மாற்றிக்கொண்டால் என்ன நடக்கும் என்பது தான் கதையாக இருக்கும்.
தமிழில் ஹிட் ஆன இந்த படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய இருக்கின்றனர்.
பார்த்திபனை பழிவாங்கினாரா?
லவ் டுடே படத்தில் ஒரு காட்சியில் 'பக்காவா பேசிட்டு இருந்த நீ.. திடீர்னு பார்த்திபன் மாதிரி பேச ஆரம்பிச்சுட்டியே' என வசனம் வரும். படத்தை தியேட்டரில் பார்த்துக்கொண்டிருந்த பார்த்திபன் விழுந்து விழுந்து சிரித்தாராம். ஆனால் அதன் பின் தான் 'பைத்தியம் போல பேசுகிறார்' என அந்த வசனம் சொல்வது அவருக்கு புரிந்ததாம். இதை அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
இதற்க்கு முன்பு பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி படம் வெளிவந்த போது அதன் கதை நடிகர் பார்த்திபனின் அசிஸ்டன்ட் எழுதி வைத்திருந்த கதை போலவே இருந்தது தெரிய வந்தது. அதற்காக புகார் கொடுத்து பிரதீப்பிடம் இருந்து நஷ்ட ஈடு வாங்கி கொடுத்தாராம் பார்த்திபன்.
அதற்கு பழிவாங்க தான் இப்படி ஒரு வசனத்தை லவ் டுடே படத்தில் பிரதீப் வைத்தாரோ?
1500 கோடி சொத்துக்காக 60 வயது நடிகரை மணந்த பவித்ரா? முன்னாள் கணவர் அதிர்ச்சி புகார்

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
