அல்லு அர்ஜுன் படத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்க மறுத்தது ஏன்?.. என்ன காரணம்?
அல்லு அர்ஜுன்
புஷ்பா 2 என்ற மாஸ் ஹிட் படத்தை கொடுத்து வெற்றிப் பட நாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அல்லு அர்ஜுன்.
ரூ. 1000 கோடி வசூல் வேட்டை செய்தது புஷ்பா 2 படம், இந்த படத்திற்காக அவர் ரூ. 300 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம்.
இப்படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் சூப்பரான பிரம்மாண்ட படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த புதிய படத்திற்கான மாஸ் அறிவிப்பு சமீபத்தில் வெளியாக ரசிகர்களும் இப்படத்திற்காக ஆவலாக உள்ளனர்.
காரணம் என்ன
இந்த படத்தில் நாயகியாக நடிக்க வைக்க ஹாலிவுட்டில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவை அணுகியுள்ளார்கள்.
ஆனால் அவரோ ராஜமௌலி-மகேஷ் பாபு படம் மற்றும் ஹிந்தியில் க்ரிஷ் 4 படத்தில் நடிக்கவும் ஒப்புக் கொண்டதால் தேதி பிரச்சனை காரணமாக அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்க முடியாது என கூறியுள்ளார்.
அட்லீ, இதுவரை அல்லு அர்ஜுனுடன் ஜோடி சேராத நாயகியை கமிட் செய்ய வேண்டும் என்ற முடிவில் உள்ளாராம்.