தனுஷ் எனக்காக இரண்டு கதை வைத்திருந்தார்.. ரஜினி நடிக்க மறுத்தது ஏன்?
நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை தான் நடிகர் தனுஷ் காதல் திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணம் ஆகி 15 ஆண்டுகள் பிறகு அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.
பிரிந்த பிறகு இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஐஸ்வர்யா இயக்கி இருக்கும் லால் சலாம் படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது.

தனுஷ் இயக்கத்தில் நடிக்க மறுத்த ரஜினி
ரஜினி லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி தான் எப்போதும் பெரிய இயக்குனர்கள் உடன் பணியாற்றி பழகிவிட்டதால் மகள் இயக்கத்திலேயே நடிக்க முதலில் தயங்கினேன் என கூறி இருக்கிறார். கோச்சடையான் படத்தில் நடிக்கும்போதே சௌந்தர்யாவுக்கு பதில் கே.எஸ்.ரவிக்குமார் வந்து தான் ஆக்ஷன், கட் சொல்ல வேண்டும் என கூறினேன்.
"தனுஷ் எனக்காக இரண்டு கதைகள் வைத்திருந்தார், ஆனால் நான் சொன்ன காரணத்தை அவர் புரிந்துகொண்டார்" என ரஜினி தெரிவித்து இருக்கிறார்.
மேலும் லால் சலாம் படத்தில் தானே கேட்டு நடித்ததாகவும் ரஜினி கூறி இருக்கிறார்.

ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri