பிக்பாஸ் டைட்டில் வென்ற ராஜு ஜெயமோகன் CWC வந்தது ஏன் தெரியுமா?... இதுதான் காரணமா?
பிக்பாஸ் ராஜு
ரியாலிட்டி ஷோக்களில் பிரபலங்கள் பலர் கலந்துகொள்வதற்கு காரணம் அந்நிகழ்ச்சி மூலம் மக்களிடம் தங்களது திறமையை காட்ட பயன்படுத்திக் கொள்கின்றனர்.
அப்படி மக்களிடம் அதிகம் போய் சேர்க்கும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ்.
இதில் பலரும் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிக்காட்டியுள்ளார்கள் சின்னத்திரையில் சீரியல்களில் துணை கதாபாத்திரங்கள் நடித்து பிரபலமானவர் தான் ராஜு ஜெயமோகன், இவர் பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொள்ள வெற்றியாளராகவும் டைட்டிலை கைப்பற்றினார்.
அதன்பிறகு பெரியதாக ஜொலிப்பார் என்று பார்த்தால் அது நடக்கவில்லை.
குக் வித் கோமாளி
பிக்பாஸ் பிறகு அவரே எழுதி, இயக்கி வெப் சீரிஸை களமிறக்கினார், பெரியதாக பேசப்படவில்லை. அடுத்து பன் பட்டர் ஜாம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகி நடித்து முடித்துள்ளார்.
ஆனால் அப்படம் சில காரணங்களால் வெளியாகாமல் இருக்கிறது.
இந்த சூழலில் தன்னை மக்கள் நியாபகம் வைத்துக்கொள்ள ஒரு பிளாட்பார்ம் தேவைப்படுகிறது, அதற்காக தான் நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அவரே கூறியுள்ளார்.

ஆபரேஷன் பன்யான் மர்சூஸ் என இந்தியா மீதான தாக்குதலுக்கு பெயரிட்டுள்ள பாகிஸ்தான் - அதன் அர்த்தம் என்ன? IBC Tamilnadu
