34 வயதாகியும் திருமணம் செய்யாமலேயே இருப்பது ஏன்?... கேள்வி கேட்பவர்களுக்கு ரெஜினா தரமான பதிலடி
நடிகை ரெஜினா
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்கள் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரெஜினா கஸாண்ட்ரா.
2005ம் ஆண்டு கண்ட நாள் முதல் படத்தின் மூலம் அறிமுகமானார், பின் அழகிய அரசுரா படத்தில் நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே கை கொடுக்காத நிலையில் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார்.
சிவகார்த்திகேயனுடன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் கொஞ்சம் ரீச் கொடுத்தது. கடைசியாக தமிழில் இவர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்திருந்தார்.
திருமணம்
அண்மையில் ஒரு பேட்டியில் 34 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் இருப்பது குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், எப்போ கல்யாணம் பண்ண போற என்று என்னுடைய அம்மாவே கேட்க மாட்டாங்க, அப்படியிருக்கும் போது அந்த கேள்வியை யார் கேட்டாலும், என்னுடைய அம்மாவே கேட்க மாட்டாங்க, நீங்கள் ஏன் கேட்கிறீர்கள், உங்களுக்கு என்ன என காட்டமாக பதில் அளித்துள்ளார்.