சமந்தா எங்கே என கேட்ட முன்னாள் மாமனார்.. வர மறுத்த்து ஏன்?

Parthiban.A
in பிரபலங்கள்Report this article
சமந்தா
நடிகை சமந்தா நடித்து உள்ள குஷி படம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி ரிலீஸ் ஆனது. விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் ஈட்டி வருகிறது.
மூன்று நாட்களில் 70.23 கோடி ரூபாய் குஷி படம் வசூலித்து இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
பிக் பாஸ் வர மறுத்த சமந்தா
குஷி படத்தை தற்போது படக்குழுவினர் பல விதங்களில் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர். நேற்று தெலுங்கு பிக் பாஸ் 7ம் சீசன் தொடங்கிய நிலையில் அதில் ப்ரோமோஷனுக்காக விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார். ஆனால் சமந்தா வரவில்லை.
நடிகர் நாகர்ஜுனா தான் பிக் பாஸ் ஷோவை தொகுத்து வழங்குகிறார். அவர் சமந்தாவின் முன்னாள் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் போனால் அவரை சந்திக்க நேரிடும் என்பதாலே சமந்தா வரவில்லையா என பேச்சு எழுந்திருக்கிறது.
சமந்தா பற்றி நாகார்ஜுனா விஜய் தேவரகொண்டாவிடம் ஷோவில் கேட்டிருக்கிறார். அதற்கு பதில் சொன்ன அவர் 'சமந்தா தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். மயோசிட்டிஸ் சிகிச்சை பெறுவது மட்டுமின்றி குஷி ப்ரோமோஷனும் செய்து வருகிறார்' என விஜய் தேவரகொண்டா கூறி இருக்கிறார்.

ஜெயலலிதாவை எதிர்த்தது.. நைட் ஃபுல்லா தூக்கமில்ல - 30 ஆண்டுகளுக்கு பின் மனம் திறந்த ரஜினி IBC Tamilnadu
