பராசக்தி படத்தில் இருந்து சூர்யா விலகியது ஏன்.. சுதா கொங்கரா போட்டுடைத்த உண்மை
சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படம் வரும் ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், இன்னும் சென்சார் பணிகள் நிறைவடையாமல் இருக்கிறது. ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதை இது என்பதால் சென்சாரில் அதிக காட்சிகளை சொன்ன சொன்னதாகவும், அதனால் ரிவைசிங் கமிட்டிக்கு படம் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

சூர்யா விலகியது ஏன்?
பராசக்தி படத்தில் முதலில் நடிகர் சூர்யா தான் நடிக்க இருந்தார். புறநானூறு என்ற பெயரில் இந்த படம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் இருந்து சூர்யா திடீரென விலகிவிட்டார். அதன் பிறகு தான் சிவகார்த்திகேயனை வைத்து சுதா கொங்கரா பராசக்தி என்ற பெயரில் அதே கதையை படமாக எடுத்தார்.
இந்நிலையில் சுதா கொங்கரா அளித்த பேட்டியில், சூர்யா இந்த கதையில் நடிக்காதது ஏன் என்கிற காரணத்தை போட்டுடைத்து இருக்கிறார்.
"கொரோனா காலகட்டத்தில் நான் சூர்யாவுக்கு இந்த கதை சொன்னேன். எனக்கு சூர்யாவை மட்டும் தான் அந்த நேரத்தில் தெரியும். அதனால் சூர்யாவிடம் போன் செய்து கதை பற்றி கூறினேன். அவரும் சரி என்றதால் நான் கதை பற்றி ஆராய்ச்சியில் இறங்கினேன்."

டைம் இல்லை என சொன்ன சூர்யா
"அதற்கு பிறகு என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. இந்த படத்திற்காக தொடர்ந்து ஷூட்டிங் செய்ய தனக்கு நேரம் இல்லை என சூர்யா கூறினார்."
"தொடர்ந்து ஷூட்டிங் செய்யாமல் இடைவெளி விட்டுவிட்டு செய்தால் தயாரிப்பு செலவு மிகவும் அதிகம் ஆகிவிடும். தயாரிப்பாளர் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார். இதுதான் சூர்யா விலக முக்கிய காரணம்" என சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.