சூர்யாவின் தங்கை ஏன் நடிக்கவில்லை.. முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாக வந்த வாய்ப்பை விட்டது ஏன்?
நடிகர் சிவக்குமார் குடும்பத்தில் இருந்து சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் நடிக்க வந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக இருந்து வருகின்றனர். இருப்பினும் சூர்யாவின் தங்கை பிருந்தா நடிகை ஆகவில்லை.
அவருக்கு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஏன் நடிக்கவில்லை என்கிற காரணத்தை தற்போது அவர் கூறி இருக்கிறார்.
ஏன் நடிக்கவில்லை?
பிருந்தா சிவக்குமார் பள்ளி படிக்கும்போது பாடகி ஆகும் வாய்ப்பு தேடி வந்ததாம். அதன் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் நடித்த கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் சிம்ரன் ரோலில் முதலில் நடிக்க வாய்ப்பு வந்ததாம்.
அப்போது மணிரத்னத்திற்கு உதவியாளராக இருந்த சுதா கொங்கரா தான் வந்து பேசினாராம்.
ஆனால் எனக்கு நடிக்க ஆர்வம் இல்லை என சொல்லி பிருந்தா மறுத்துவிட்டாராம். இந்த விஷயத்தை தற்போது ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் பிருந்தா.