பொன்னியின் செல்வனில் நடிக்க இருந்த விஜய், மகேஷ் பாபு.. ஆனால் திடீரென ட்ராப் ஆனது ஏன் தெரியுமா?
இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது படத்தில் மெயின் ரோல்களில் நடித்து இருக்கும் ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், விக்ரம் ஆகியோரின் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் இன்று படத்தில் டீஸர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க 2010ல் மணிரத்னம் முயற்சி செய்திருக்கிறார். அதில் விஜய் மற்றும் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ஆகியோரை ஒப்பந்தமும் செய்திருக்கிறார்.
அவர்களை வைத்து போட்டோஷூட்டும் நடந்து இருக்கிறது. ஆனால் ஷூட்டிங் தொடங்க ஒரு வாரம் இருந்த நேரத்தில் படத்தை கைவிட்டனர்.
ட்ராப் ஆனது ஏன்?
VFX தொழில்நுட்பங்கள் தற்போது இருப்பது போல அந்த நேரத்தில் இல்லை, அதனால் படத்தின் தொடங்கும் முன்பே மணிரத்னம் கைவிட்டார். இந்த தகவலை மணிரத்னத்தின் முன்னாள் உதவி இயக்குனர் தனா என்பவர் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
தனா தமிழில் படைவீரன், வானம் கொட்டட்டும் ஆகிய படங்களை இயக்கியவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu
