விஜய் பாதி கதை கேட்டு நிராகரித்த படம்.. கோபமான இயக்குனர்! வேறு ஹீரோ நடித்து சூப்பர்ஹிட்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என முன்னணி இயக்குனர்கள் வெயிட்டிங். ஆனால் படத்தினை உறுதி செய்யும் முன் எப்போதும் பல இயக்குனர்களிடம் கதை கேட்டுவிட்டு அதில் ஒன்றை தேர்வு செய்வார்.
அப்படி விஜய் பல வருடங்களுக்கு முன்பு சந்தித்து இயக்குனர் லிங்குசாமி ஒரு கதையை கூறி இருக்கிறார். கதையை கேட்டுக்கொண்டிருந்த விஜய் பாதியிலேயே வேண்டாம் என கூறி நிறுத்த சொன்னாராம். இன்னும் ஒரு பத்து நிமிஷம் கேளுங்க உங்களுக்கு புரியும் என லிங்குசாமி கேட்டாலும் விஜய் உறுதியாக முடியாது என சொல்லி அவரை அனுப்பி வைத்துவிட்டாராம்.
சண்டக்கோழி
சண்டக்கோழி படத்தின் கதையை கேட்டுவிட்டு தான் விஜய் அப்படி செய்திருக்கிறார். அதன் பின் லிங்குசாமி விஷாலை வைத்து அந்த கதையை இயக்கி பெரிய ஹிட் கொடுத்தார்.
அதன் பின் ஒரு விழாவில் லிங்குசாமியை சந்தித்த விஜய் 'அண்ணா படம் சூப்பராக இருந்தது' என கூறினாராம். 'நீங்க தான் பாதிக்கு மேல கேக்கவே இல்லையே' என அவர் மீது கோபத்தில் இருந்த லிங்குசாமி கேட்டிருக்கிறார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
