விஜய் திடீரென திருச்செந்தூர் கோவிலுக்கு போனது ஏன்? உண்மையான காரணம் இதுதானாம்
நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக கட்சிக்கு பல சினிமா பிரபலங்களும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர்.
மே 4ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இன்று அதிகாலை விஜய் திடீரென திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

காரணம்
விஜய் திடீரென கோவிலுக்கு சென்றது ஏன் என காரணம் தெரியுமா? அவரது ஜோசியர் தான்.
விஜய்க்கு தொடர்ந்து வரும் தடைகள் மற்றும் அவருக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும் என்றால் திருச்செந்தூர் சென்று அதிகாலை விஸ்வரூப தரிசனம் செய்யும்படி ஜோதிடர் கூறினாராம். அதனால் தான் விஜய் திடீரென திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று இருக்கிறார்.
மேலும் அவர் அங்கு கடலிலும் கால் வைத்து அவர் வழிபட்டு இருக்கிறார்.
