Wicked: For Good திரை விமர்சனம்
ஹாலிவுட் சினிமாவில் விட்ச் கதாபாத்திரத்தை வைத்து பல படங்கள் வந்துள்ள நிலையில் விக்கட் பட செம பேமஸ், இதில் தற்போது வெளிவந்துள்ள Wicked: For Good எப்படியுள்ளது? பார்ப்போம்.

கதைக்களம்
படம் முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்து தொடங்குகிறது, இதில் எல்சா-வை விக்கட் விட்ச் என எல்லோரும் தவறாக புரிந்துக்கொள்ள அவரோ இதற்காக காடுகளில் பதுங்கி வாழ்ந்து வருகிறார்.

அதே நேரத்தில் க்ளிண்டா எமர்ல்ட் சிட்டியில் ராணி-ஆக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் எல்பா-விற்கு எதிராக மிகப்பெரிய கும்பல் ஒன்று வளர்கிறது.

இதனால் நாட்டில் மிகப்பெரிய பிரச்சனைகள் வெடிக்க, அதை தொடர்ந்து எல்பா, க்ளிண்டா இருவரும் இணைந்து எப்படி அந்த பிரச்சனைகளை முறியடிக்கிறார்கள் என்ற பேண்டசி கதையே இந்த Wicked: For Good.
படத்தை பற்றிய அலசல்
படமே பேண்டசி உலகம் என்பதால் இயக்குனர் Jon M. Chu தன் கற்பனை குதிரையை பறக்க விட்டுள்ளார். ஆக்ஷன் காட்சிகளை செம பிரமாண்டமாக எடுத்துள்ளார்.

எல்பா ஊரே தவறாக புரிந்துக்கொண்டு காட்டில் மறைந்து வாழும் கதாபாத்திரம், தன் ஊருக்கு ஒன்று என்றதும் க்ளிண்டா-வுடன் களத்தில் இறங்கி மீட்கும் காட்சிகள் சூப்பர்.
அதே நேரத்தில் இந்த கதை நிறைய பாடல்கள் மூலம் இயக்குனர் ப்ரசண்ட் செய்ய முயற்சித்துள்ளார், அதுவும் பல இடங்களில் காட்சிகளுக்கு எமோஷ்னல் சப்போர்ட் ஆக உள்ளது.

ஆனால், ஒரு கட்டத்தில் முக்கியமாக நம்ம ஊர் ஆடியன்ஸுக்கு பொறுமையை சோதிக்கும் அளவிற்கும் உள்ளது. கதை 2,3 இடத்தில் நடப்பது போல் காட்டியுள்ளனர். அந்த ஊர் இடம் ஆகியவற்றை வடிவமைத்த இடம் நன்றாக உள்ளது.
படத்தில் டெக்னிக்கல் ஒர்க் என்று பார்த்தால் ஒளிப்பதிவு, சிஜி ஒர்க் என அனைத்தும் பிரமாதம், அதையெல்லாம் விட இசை மிகப்பெரிய பலம்.

க்ளாப்ஸ்
பேண்டசி காட்சிகள்
எமோஷ்னல் காட்சிகள்
டெக்னிக்கல் ஒர்க்
பல்ப்ஸ்
பாடல்கள் கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது.
மொத்தத்தில் பேண்டசி பட ரசிகர்கள் நீங்கள் என்றால் உங்களுக்கான விருந்து இந்த படம்.
