அதை செய்திருந்தால் ரோபோ சங்கரை பத்திரமாக பார்த்திருந்திருக்கலாம்.. மனைவி உருக்கம்!
ரோபோ ஷங்கர்
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் சின்னத்திரை பக்கம் வந்து மக்களை கவர்ந்தவர் ரோபோ ஷங்கர். சிரிக்கவே மறந்த பலரை சிரிக்க வைத்த ரோபோ ஷங்கர் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
அந்த வகையில், கலக்கப்போவது யாரு, அது இது எது என பல நிகழ்ச்சிகளில் ஓய்வே இல்லாமல் கலந்துகொண்டு வந்தார். அவரின் திறமை கண்டு வெள்ளித்திரை அழைக்க அதிலும் ஒரு வலம் வந்தார்.
அஜித், விஜய், தனுஷ் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் படங்கள் நடித்து அசத்தினார். இவ்வாறு மக்களை சிரிக்க வைத்த ரோபோ உடல் நல குறைவால் திடீரென உயிரிழந்தார். இவருடைய மறைவு அவரது மனைவி பிரியங்காவை நிலைகுலைய வைத்தது.

உருக்கம்!
இந்நிலையில், தற்போது நிகழ்ச்சி ஒன்றில் ரோபோ குறித்து பிரியங்கா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் நான் ரோபோ சங்கராகவும், அவர் பிரியங்காவாகவும் பிறக்க வேண்டும். நான் அவரை நிறைய காதலிக்கதான் செய்தேன்.
ஆனால், இன்னும் நிறைய காதலித்திருந்தால் அவரை இன்னும் பத்திரமாக பார்த்திருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
