Wildwood (animation): திரை விமர்சனம்

By Sivaraj Nov 15, 2026 08:47 AM GMT
Report

மாஸ்டர்ஸ் ஆஃப் தி யுனிவெர்ஸ் (He-Man) திரைப்படத்தின் படுதோல்விக்குப் பிறகு, டிராவிஸ் நைட் இயக்கத்தில் வெளியாகியுள்ள Wildwood அனிமேஷன் திரைப்படம் நம்மை கவர்ந்ததா என்று பார்ப்போம் வாங்க.

Wildwood (animation): திரை விமர்சனம் | Wildwood Movie Review

Mr. Queen வெப் சீரிஸ் - சிறப்பு பார்வை

Mr. Queen வெப் சீரிஸ் - சிறப்பு பார்வை

கதைக்களம்

போர்ட்லேண்டைச் சேர்ந்த ப்ரூ மெக்கீல் என்ற சிறுமி, தனது பெற்றோர் மற்றும் நடக்க பழகாத தம்பி மேக் ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். ப்ரூவின் தந்தை தனது மகனுக்கு பேண்டஸி கதை ஒன்றைக் கூறி, அந்த காட்டுப்பகுதிக்கு எப்போதும் போகக் கூடாது என்று சொல்கிறார்.

இந்த நிலையில், பெற்றோரின் அறிவுறுத்தலை மீறி ப்ரூ தனது தம்பியை அழைத்துக் கொண்டு வெளியே செல்கிறாள். கடை ஒன்றில் வகுப்புத் தோழன் கர்டிஸ் மெல்பர்க்கை சந்திக்கும் ப்ரூ, அவனுடன் பேசிக்கொண்டே பார்க்கிற்கு செல்ல அங்கு திடீரென வந்த காக்கைக் கூட்டம், குழந்தை மேக்கினை தூக்கிச் செல்கிறது.

Wildwood (animation): திரை விமர்சனம் | Wildwood Movie Review

இதனால் அதிர்ச்சியடையும் ப்ரூ, வேகமாக சைக்கிளை எடுத்துக் கொண்டு காக்கைகளை பின்தொடர கர்டிஸும் வண்டியில் சிக்கிக்கொண்டதால் உடன் செல்கிறான். ஆற்றுப்பாலம் வழியாக அவர்கள் வனாந்தரப் பகுதியை அடைய, செடி மீது தெரியாமல் ப்ரூவின் கைப்பட்டு இரத்தம் வர காட்டிற்குள் செல்ல வழி திறக்கிறது.

இருவரும் உள்ளே செல்ல சீருடை அணிந்த ஓநாய்கள் பேசிக்கொள்வதைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றனர். ஓநாய்கள் அவர்களைத் துரத்த, ஒரு கட்டத்தில் சிறுவன் கர்ட்டிஸின் அறிவுறுத்தலின் பேரில் ப்ரூ வேறு பாதையில் தப்பிச் செல்கிறாள். பின்னர் ஓநாய்களிடம் சிக்கும் கர்டிஸ், கதையில் வந்த மந்திர தந்திரம் தெரிந்த அலெக்ஸாண்ட்ராவிடம் அழைத்துச் செல்லப்படுகிறான்.

Wildwood (animation): திரை விமர்சனம் | Wildwood Movie Review

அதே சமயம் ப்ரூ சவுத் வுட்டில் உள்ள ஆளுநர் மாளிகையில், தபால் துறைத் தலைவர் ரிச்சர்ட்டினால் சிறை வைக்கப்படுகிறாள். ப்ரூ மற்றும் கர்டிஸ் இருவரும் தப்பித்தார்களா? குழந்தை மேக்கினை மீட்டர்களா? என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்

பம்பிள்பீ, மாஸ்டர்ஸ் ஆஃப் தி யுனிவெர்ஸ் படங்களைக் கொடுத்த டிராவிஸ் நைட் இயக்கியிருக்கும் படம் இது. கிரிஸ் பட்லரின் திரைக்கதையில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ரசிக்கும்படியாக இயக்கியிருக்கிறார் டிராவிஸ்.

படத்தின் தொடக்கத்திலேயே கதை ஆரம்பித்துவிடுவதால் நாமும் எளிதாக அதற்குள் சென்றுவிடுகிறோம். கதாநாயகி ப்ரூ காட்டுக்குள் சென்றவுடன் பேசும் ஓநாய்கள், விலங்குகளுடன் ஒன்றாக வாழும் மனிதர்கள், ஆட்கொள்ளும் செடி, கொடிகள் என பல ஆச்சரியங்கள் நம்மை கவர்கின்றன.

Wildwood (animation): திரை விமர்சனம் | Wildwood Movie Review

காக்கைகளால் தூக்கிச் செல்லப்பட்ட குழந்தையை மீட்பதுதான் கதை என்றாலும், பல கிளைக்கதைகளை சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியிருக்கிறது படக்குழு. குறிப்பாக அலெக்ஸாண்ட்ராவின் பிளாஷ்பேக் மற்றும் அவரது திட்டம் உள்ளிட்ட காட்சிகள் செம பேண்டஸி.

நமது பார்வை திரையைவிட்டு அகலா வண்ணம், படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஏதோ ஒன்றை செய்து ரசிக்க வைக்கின்றன. பெரிதாக காமெடிக்கு மெனக்கெடவில்லை என்றாலும், ஆங்காங்கே வரும் டைமிங் காமெடிகள் சிரிக்க வைக்கின்றன. எமோஷ்னலாக அட்டாச் ஆகும் காட்சிகளும் உள்ளன.

Wildwood (animation): திரை விமர்சனம் | Wildwood Movie Review

ப்ரூ கழுகுடன் பறக்கும் சண்டைக்காட்சி செம விஷுவல் ட்ரீட். அதேபோல் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி பிரம்மாண்டம். அனிமேஷன் படங்கள் என்றாலே டார்கெட் ஆடியன்ஸ் குழந்தைகள்தான்; அப்படியிருக்க இந்த படத்தில் இரத்தம் தெரியும்படியான வன்முறை காட்சிகள் இருப்பது உறுத்தல். பெய்டன் எலிசபெத், ஜேக்கப் ட்ரெம்ப்ளே, கேரி முல்லிகன் உள்ளிட்டோர் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு கணக்கச்சிதமாக பின்னணி குரல் கொடுத்துள்ளனர்.

டெக்னிக்கலாக படம் செம விஷுவல் ட்ரீட். காலேப்பின் ஒளிப்பதிவு, டேரியோ மரியாநெல்லியின் இசை ஆகியவை மிகச்சிறப்பு. படத்தொகுப்பாளர் கிறிஸ்டோபர் முர்ரி-கிரீன் மட்டும் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்.

க்ளாப்ஸ்

விஷுவல்ஸ்

திரைக்கதை

சண்டைக்காட்சிகள்

பிளாஷ்பேக்

பல்ப்ஸ்

வன்முறை காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்

மொத்தத்தில் இந்த Wildwood குழந்தைகளுக்கு குதூகலம். குட்டீஸை அழைத்துச் சென்று பெரியவர்களும் ரசிக்கலாம்.

Wildwood (animation): திரை விமர்சனம் | Wildwood Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US