ஆதி - நிக்கி கல்ராணி திருமணத்திற்கு அஜித் வருகிறாரா? நடிகர் சொன்ன பதில்
நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. அதில் குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இந்நிலையில் வரும் மே 18ம் தேதி நிக்கி கல்ராணி மற்றும் ஆதி திருமணம் சென்னையில் நடைபெற இருக்கிறது. ஆதி ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும் அவர் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். மேலும் நிக்கி கல்ராணியும் சென்னையில் செட்டில் ஆகி விட்டார். அதனால் திருமணத்தை இங்கு நடத்துகின்றனர்.
சமீபத்தில் ஆதி நடிகர் அஜித்தை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்து இருந்தார். அந்த போட்டோவும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.
இந்நிலையில் இன்று மீடியாவை ஆதி மற்றும் நிக்கி சந்தித்தனர். அப்போது அஜித் திருமணத்திற்கு வருவாரா என கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய ஆதி, "அழைப்பிதழ் கொடுத்திருக்கிறோம், அவர் வருவாரா இல்லையா என்பது தெரியவில்லை" என கூறி இருக்கிறார்.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
