விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா.. ரஜினிகாந்த் ஒரே வார்த்தையில் சொன்ன பதில்
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் குதித்து இருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் அவர் சமீபத்தில் பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்கினார்.
அப்போது அவரை காண மிகப்பெரிய கூட்டம் கூடியது. மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் வரும்போது காசு கொடுத்து கூட்டம் கூட்டப்படுவதாகவும், ஆனால் விஜய்க்கு இப்படி மிகப்பெரிய கூட்டம் கூடுவது பற்றி பலரும் வியந்து பேசி இருந்தனர்.
மறுபுறம் நடிகர் என்றால் பார்ப்பதற்கு கூட்டம் வரத்தான் செய்யும், அதெல்லாம் ஓட்டாக மாறாது என எதிர் தரப்பினர் கூறி வருகின்றனர்.
ரஜினிகாந்த் சொன்ன பதில்
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் 'விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா?' என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர்.
அந்த கேள்வியை பொறுமையாக இரண்டு முறை கேட்ட ரஜினி "நோ கமெண்ட்ஸ்" என பதில் கூறிவிட்டு கிளம்பிவிட்டார்.