தாத்தா எடுத்த அதிரடி முடிவு! இந்த முறையாவது வசமாக மாட்டுவாரா கோபி
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபியின் அட்ராசிட்டி அதிகரித்து கொண்டே இருக்கிறது. குடும்பத்தினர் எல்லோரும் சென்று இருக்கும் தீம் பார்க்கிற்கு கோபி அவரது கள்ளகாதலியான ராதிகாவையும் அவரது மகளையும் அழைத்து வருகிறார்.
தாத்தாவிடம் சொல்லும் எழில்
கோபி அவசர அவசரமாக ஒரு பெண்ணை தீம் பார்க்கில் இருந்து கூட்டி சென்றதை எழில் பார்த்துவிட்ட நிலையில் அது பற்றி என்ன செய்வது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்.
அது பற்றி தாத்தாவிடம் சென்று கூறுகிறார் எழில். அவருக்கு ஏற்கனவே கோபி பற்றி தெரியும் என்பதால் அவர் இந்த விஷயத்தை கேட்டு கடும் கோபம் அடைகிறார்.
போட்டோவுடன் கிளம்பும் தாத்தா
இந்த விஷயத்தை பற்றி எதாவது செய்ய வேண்டும் என தாத்தா யோசித்துக்கொண்டிருக்க பாக்யா-கோபி இருக்கும் போட்டோவை கவனிக்கிறார். அதை ராதிகாவிடம் காட்டிவிட்டால் கோபி வசமாக மாட்டிக்கொள்வான் என முடிவெடுத்து, அந்த போட்டோவை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் அவர் தடுமாறி தான் அந்த போட்டோவுடன் நடந்து செல்கிறார்.
மறுபுறம் கோபி ராதிகாவின் வீட்டை உடன் மாற்ற வேண்டும் என சொல்லி பொருட்களை ஏற்ற வண்டியை வர சொல்கிறார்.
தாத்தாவால் போட்டோவை காட்ட முடியுமா? கோபி சிக்குவாரா? நாளைய எபிசோடில் தான் தெரியவரும்.