கோபிக்கு இன்னொரு ஷாக் கொடுத்த பாக்யா! பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ
Parthiban.A
in தொலைக்காட்சிReport this article
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் அடுத்த வாரம் மேலும் ஒரு பரபரப்பான சம்பவம் நடைபெற இருக்கிறது.
விவாகரத்து
பாக்யா மற்றும் கோபி இருவருக்கும் நீதிமன்றம் சட்டப்படி விவாகரத்து கொடுத்துவிட்டது. தற்போது பாக்யா மீண்டும் வீட்டுக்குள் வந்ததால் அவருக்கும் கோபிக்கும் இடையே பெரிய பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது.
அவர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என கோபி கத்தி கொண்டிருக்கிறார், ஆனால் மற்ற குடும்பத்தினர் போக வேண்டாம் என அவரிடம் கெஞ்சிக்கொண்டிருக்கின்றனர்.
ஷாக் கொடுத்த பாக்யா
பாக்யா அதன் பின் அறைக்குள் சென்று ஒரு பெட்டியை தூக்கி வருகிறார். அவர் தான் வெளியே போக போகிறார் என மொத்த பேரும் ஷாக் ஆகி நிற்கின்றனர்.
கோபி கடும் கோபத்தில் அந்த பெட்டியை தூக்கி வெளியில் வீசுகிறார். அப்போது தான் அதில் அவரது உடைகள் இருப்பது தெரியவருகிறது.
நான் ஏன் வெளியில் போக வேண்டும், நீங்க வெளியே போங்க என சொல்லி பாக்யா ஷாக் கொடுக்கிறார். ப்ரோமோ இதோ.