மகளை இழுக்க பார்க்கும் கோபி.. நடக்குமா? பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ
பாக்கியலட்சுமி
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த வாரம் இனியா பள்ளியில் செல்போன் பயன்படுத்தியதற்காக தண்டிக்கப்பட்டு வீட்டில் பெற்றோரை அழைத்து வரும்படி கூறுகிறார். அப்போது அவர் பாக்யாவிடம் எதுவும் சொல்லாமல், நேராக அப்பா கோபிக்கு கால் செய்து பள்ளிக்கு வர வைக்கிறார்.
கோபி வந்து பேசி பிரச்சனையும் சரி செய்துவிட்டு செல்கிறார். ஆனால் அதற்கு பிறகு தான் உண்மையான பிரச்சனையே இனியா வீட்டில் தொடங்குகிறது.
கோபியுடன் செல்லும் இனியா?
நடந்த விஷயத்திற்காக வீட்டில் எல்லோரும் இனியாவை திட்டுகிறார்கள். "கோபி தான் வேணும்னா நீ அப்படியே போய்டு இங்க இருந்து" என பாட்டி ஒரு அரை விடுகிறார்.
அதை கேட்டு கோபி வீட்டுக்குள் வர, 'எல்லாரும் அடிக்கிறார்கள்' என இனியா அவரிடம் கூறுகிறார். "இனியா என்னுடன் வர தயார் என்றால் நான் கூட்டிட்டு போக தயார்" என கோபி கூறி அழைக்கிறார். இனியா என்ன முடிவு எடுக்க போகிறார்.
ப்ரோமோவில் நீங்களே பாருங்க..
பல லட்சத்துடன் இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய விஜே. மஹேஸ்வரி.. எவ்வளவு தெரியுமா