மீண்டும் நடிப்பாரா காஜல்? பிரசவத்திற்கு பின் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டாரா
நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த நேரத்திலேயே திடீரென திருமணம் செய்து கொண்டார். அவர் தொழிலதிபர் கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
அதன் பின் காஜல் கர்ப்பமாக இருக்கும் செய்தி புகைப்படங்களுடன் வெளியானது. சமீபத்தில் தான் அவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. மகன் போட்டோவை சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். அது இணையத்தில் வைரல் ஆனது.
இந்நிலையில் தற்போது காஜல் மீண்டும் நடிப்பாரா இல்லையா என ஒரு செய்தி தெலுங்கு மீடியாவில் வெளியாகி இருக்கிறது. தற்போதைக்கு நடிக்கும் எண்ணம் இல்லை என்றும், இன்னும் ஒரு வருடத்திற்கு காஜல் எந்த ப்ராஜக்ட்டும் ஒப்புக்கொள்ளமாட்டார் என்றும் செய்தி வெளியாகி இருக்கிறது.
இந்த தகவல் காஜல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.