சொன்ன தேதியில் வருமா "கருப்பு".. RJ பாலாஜி வெளியிட்ட அறிவிப்பு
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கருப்பு படம் மே 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த படத்தின் ட்ரெய்லர் இதுவரை வெளியாகாமல் தான் இருக்கிறது.
தமிழ்நாட்டில் அரசியல் களம் பரபரப்பாக இருந்து வந்த நிலையில் ட்ரெய்லர் வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர்.
பெரும்பான்மை கிடைக்காமல் விஜய் முதலமைச்சராக பதவியேற்பதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில் பராபரப்பு குறைந்த பிறகுதான் கருப்பு படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என ஆர்ஜே பாலாஜி முன்பு அறிவித்திருந்தார்.
தற்போது விஜய்க்கு கூட்டணி உறுதியாகி, முதலமைச்சராக நாளை பதவியேற்க இருப்பதாக அறிவிப்பு வந்திருக்கிறது.

சொன்ன தேதியில் வெளியாகுமா கருப்பு?
இந்நிலையில் விஜய் முதலமைச்சர் பதவியேற்பதாக உறுதி ஆன அடுத்த நிமிடமே ஆர்ஜே பாலாஜி, கருப்பு பட ரிலீஸ் சொன்ன தேதியில் நடக்கும் என அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்திருக்கிறார்.
"சொன்ன தேதியில சொன்ன சொல்படி கருப்பன் வருவான்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சொன்ன தேதியில சொன்ன சொல்படி
— RJ Balaji (@RJ_Balaji) May 8, 2026
கருப்பன் வருவான் !!! 🔥🔥🔥#Karuppu from May 14.
பட்டாசு எடுத்து வைங்க பண்டிகை வரப்போகுது …!!!💥💥💥 pic.twitter.com/cZ8ci31Z0f
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri