மாஸ்டர் தியேட்டரில் வெளியாகுமா? படத்திற்கு வந்த சிக்கல்? முக்கிய அறிவிப்பு வந்தாச்சு!
மாஸ்டர் படம் வரும் ஜனவரி 13 ல் பொங்கல் ஸ்பெஷலாக தியேட்டர்களில் வெளியாக திட்டமிடப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவுப்புகளும் வெளியிடப்பட்டன.
கொரோனா பரவல் தடுப்பு காரணமாக தியேட்டரில் தீபாவளிக்கு வெளியாக முடியாத காரணத்தினால் படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் ஓடிடியில் வெளியாகுமா அல்லது தியேட்டரில் வெளியாகுமா என்ற சந்தேகமான நிலையில் தான் இருந்தது. ஆயினும் படக்குழு பொங்கல் பண்டிகை எதிர்பார்த்திருந்தது.
வசூல் காரணம் கருதி 100 சதவீதம் இருக்கைகளை அனுமதிக்க வேண்டும் என விஜய் தமிழக மற்றும் கேரள அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதில் தமிழக அரசு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்தது.
இந்நிலையில் மத்திய அரசு இவ்விசயத்தில் தமிழக அரசு செய்தது விதிமீறல் என கூறியது. அதே வேளையில் உயர் நீதிமன்றம் தியேட்டர்கள் குழந்தை போல மெல்ல மெல்ல அடி எடுத்து வைக்க வேண்டும் என கூறியது.
தற்போது 100 சதவீத இருக்கைகளுக்கான அனுமதியை ரத்து செய்து ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை 50 % இருக்கைகள் தொடரும் என கூறியுள்ளது.
இப்படியான சூழ்நிலையில் படம் தியேட்டரில் வெளியாகுமா என்ற சந்தேகம் சூழ்ந்துள்ளது.