நயன்தாரா மீது பெரிய அதிருப்தி.. என்ன செய்ய போகிறார்?
நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என சொல்லும் அளவுக்கு டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு என எந்த மொழி படம் என்றாலும் அவர் ப்ரோமோஷனுக்கு வரமாட்டார். அதை அவர் காண்ட்ராக்ட் போடும் போதே அதில் குறிப்பிடும்படி கூறிவிடுவாராம்.
இருப்பினும் அவர் கணவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிக்கும் படம் என்றால் மட்டும் அவர் ப்ரோமோஷனுக்காக சில விஷயங்கள் செய்கிறார்.

ஜவான் ப்ரோமோஷனுக்கு வருவாரா?
இந்நிலையில் தற்போது நயன்தாரா ஹிந்தியில் அறிமுகம் ஆகும் ஜவான் படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தற்போது வெளியாகி வரும் ஜவான் பாடல்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்கு நயன்தாரா வருவாரா என்பது தான் எல்லோரது கேள்வியும்.
அந்த படத்தில் சின்ன ரோலில் நடித்து இருக்கும் தீபிகா படுகோன் ஷாருக் உடன் பிக் பாஸ் ஓடிடி பைனல் ஷோவில் கலந்துகொண்டு ஜவான் படத்தை ப்ரோமொட் செய்ய இருக்கிறார்.
நயன்தாரா ப்ரோமோஷனுக்கு வராமல் தவிர்த்தால் ஹிந்தி சினிமாவில் அவர் மீது பெரிய அதிருப்தி வரலாம் எனவும் கூறப்படுகிறது.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan