ரஜினியை இயக்குவீங்களா? ராஜமௌலி சொன்ன பதிலை பாருங்க

Rajinikanth RRR Rajamouli
By Parthiban.A Dec 13, 2021 01:00 AM GMT
Report

பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்திற்கு பிறகு ராஜமௌலி தற்போது ஆர்ஆர்ஆர் என்ற படத்தினை மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்கி முடித்திருக்கிறார். அந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. ஆர்ஆர்ஆர் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் சென்னையில் ப்ரெஸ் மீட் நடந்தது.

அதில் ராஜமௌலி, ராம் சரண், ஆலியா பட் மற்றும் ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டவர்கள் நடித்து இருந்தனர். உங்களுக்கு இங்கே அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள், நீங்கள் நேரடியாக தமிழ் படம் எடுக்கலாமே என ராஜமௌலியிடம் கேட்டதற்கு "நான் யோசிப்பது தெலுங்கில் தான், அதை மொழிபெயர்த்து தர நல்ல நபர்கள் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு இயக்குனராக அது சரியாக இருக்காது" என பதில் கூறினார்.

ரஜினி போன்ற தமிழ் டாப் ஹீரோக்களை வைத்து படம் எடுக்கலாமே என கேட்டதற்கு "நான் எந்த ஹீரோ எனக்கு கால்ஷீட் கொடுக்கிறார் என பார்த்துவிட்டு அதற்காக கதை எழுதமாட்டேன். முதலில் கதையை எழுதி முடித்துவிட்டு அதற்கு பிறகு தான் எந்த ஹீரோ சரியாக இருப்பார் என முடிவெடுத்து போய் கேட்பேன். ரஜினி போன்ற நடிகர்கள் மீது எனக்கு அதிக மரியாதை இருக்கிறது. ஆனால் கதை இருந்தால் தானே படம் எடுக்க வேண்டும்" என ராஜமௌலி கூறி இருக்கிறார்.

ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தை தான் இயக்கப்போவதாக கூறிய ராஜமௌலி, அதற்கடுத்து என்ன ப்ராஜெக்ட் என இன்னும் யோசிக்கவில்லை என தெரிவித்து இருக்கிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US